சென்னை எழும்புரில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் அதிவிரைவு இரயிலானது, தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை 2019 முதல் தொடர்ந்து, ஒன்றிய அரசைக் கடிதத்தின் மூலமாகவும், ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதின் பலனாக 27.02.2023 முதல் தாம்பரம் இரயில் முனையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தபோது.