2022-23 நிதிநிலை அறிக்கையில், பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசியபோது

Discussion on 2022-23 Union Budget allocation for the Defense Sector in Lok Sabha.

அலுமினிய தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி வேகன்களை அளிப்பதில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?

மக்களவையில் திரு. டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி?

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள், நேற்று 23.03.2022 மக்களவையில் அலுமினிய தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி வேகன்களை உறுதி செய்ய, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மூன்று நாட்களுக்கு மட்டும் தேவையான நிலக்கரி உள்ள நிலைமையை சரிசெய்ய ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படுமா? என்றும், ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு:-

அலுமினியத் தொழிற்சாலைக்குத் தேவையான 17 முதல் 26 நிலக்கரி வேகன்கள் அளவிற்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த 2021-22ஆம் ஆண்டில் 1120 இலட்சம் டன்கள் அளவிற்கு நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதாகவும், நால்கோ அலுமினியத் தொழிற்சாலைகளுக்கு 10 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி உள்ளது என்றும், அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி 12 நாட்களுக்கு உள்ளது என்றும், அமைச்சர் தெரிவித்தார்.

கோல் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தின் மூலம், அலுமினியத் தொழிற்சாலைக்கு 50 மெட்ரிக் டன்கள் அளவிற்கு நிலக்கரி கிடைத்துள்ளது என்றும், மின்னணு ஏலத்தின் மூலம் 59 மெட்ரிக் டன்கள் அளவிற்கு அலுமினியத் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைத்துள்ளது என்றும், ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலை அளித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஒன்றிய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களிடம் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான திரு.டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் வழங்கியபோது.

ஏப்ரல் 2, 2022 அன்று டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத சிங் அவர்களிடம், திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு டி.ஆர்.பாலு, எம்.பி. அவர்கள் வழங்கியபோது.

நாட்டின் சாமான்ய மக்களை பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, 24.03.2022 அன்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றியபோது.

Discussion on Rise of Price of Petroleum Products which is affecting the Common Man of the Country, in the Lok Sabha on 24.03.2022 by moving an Adjournment Motion.

ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்த்துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களிடம் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான திரு.டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் வழங்கியபோது.

ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களிடம் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான திரு.டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் வழங்கியபோது.

இயற்கை விவசாயத்தைப் பெருக்க ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? மக்களவையில் திரு. டி.ஆர்.பாலு, எம்.பி. கேள்வி.

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள், நேற்று மக்களவையில் (22.03.2022), இயற்கை விவசாயத்தை குறைந்த செலவில் நடத்தி, உற்பத்தியைப் பெருக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்றும், மண்ணின் வளத்தைப் பெருக்கவும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்திடவும் அரசு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதா? என்றும், ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

                        ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு:-

குறைந்த செலவில் இயற்கை விவசாயத்தை நடத்தி, உற்பத்தியைப் பெருக்கவும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்திடவும் பல்வேறு மாநிலங்களில் முயற்சிகள் நடந்து வருவதாகவும், பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உள்ளூர் வழிமுறைகளைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தைப் பெருக்க உரிய முயற்சிகள் கடந்த 2020-21ஆம் ஆண்டு முதலாகவே எடுக்கப்பட்டு வருகிறது என்றும், மாட்டுக் கழிவுகள், இயற்கைத் தாவரங்கள் இவற்றைக் கொண்டு நான்கு இலட்சம் ஹெக்டேருக்கும் அதிமாக இயற்கை விவசாயம் நடைபெற்று வருவதாகவும், இதுவரையில் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்கு இதுவரை 49 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக தமிழநாட்டிற்கு 31 இலட்சத்திற்கும் அதிகமாக இயற்கை விவசாயத்தைப் பெருக்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்கள், மக்களவையில், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலை அளித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் வழங்கிய போது.