மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் திலகர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் (08.05.2022) உரையாற்றியபோது.

தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை (07.05.2022) தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன், கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியபோது.

தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை (07.05.2022) தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன், கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியபோது.

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் நோக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் வழங்கியபோது.