ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களிடம் வழங்கியபோது.

ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.இராஜ்நாத் சிங் அவர்களிடம் வழங்கியபோது.

ஜூலை 28, 2022 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழ் மற்றும் சின்னத்தினை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடம் அவர்கள் வழங்கியபோது

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள், தாம்பரம் மாநகராட்சி, கடப்பேரி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதியினை தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து விடுவிக்கக் கோரும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தினை, தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.இராஜா ஆகியோரிடம் 14.07.2022 அன்று வழங்கியபோது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளையால் கட்டிமுடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் கட்டிடத்தை மாண்புமிகு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுடன் திறந்து வைத்த போது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் 18.5.2022 அன்று நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) முதல் கூட்டத்தில் பங்கேற்றபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் 18.5.2022 நடைபெற்ற கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் உரையாற்றியபோது.