காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பாக 01.05.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி, பம்மல் வடக்குப் பகுதி தி.மு.க. சார்பாக 01.05.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்குப் பகுதி தி.மு.க. சார்பில் மேற்குத் தாம்பரம் சண்முகம் சாலையில், 07.04.2023 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக அரசின் நிதிநிலை அறிக்கை மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது.

பம்மல் தெற்குப் பகுதி தி.மு.க. சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 24.03.2023 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது.

சென்னை எழும்புரில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் அதிவிரைவு இரயிலானது, தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை 2019 முதல் தொடர்ந்து, ஒன்றிய அரசைக் கடிதத்தின் மூலமாகவும், ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதின் பலனாக 27.02.2023 முதல் தாம்பரம் இரயில் முனையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தபோது.

27.02.2023 அன்று சென்னை வந்திருந்த மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு.ஜகதீப் தன்கர் அவர்களை, தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களுடன் விமான நிலையம் சென்று வரவேற்றபோது.

தந்தை பெரியார் அவர்களின் 49வது நினைவு நாளான 24.12.2022 அன்று, சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் மலர்தூவி மரியாதை செலுத்தியபோது.

தி.மு.கவின் 15வது பொதுத்தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள
பொருளாளர் பொறுப்பிற்காக வேட்பு மனுவினை தலைமைக் கழகத்தில் தாக்கல் செய்தபோது