சென்னை மாநகராட்சி, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, மண்டலம்-11க்கு உட்பட்ட வார்டு-143, நொளம்பூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் 42.71 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் 31.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்வதற்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-2இல் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முகாம் 3.1.2024 அன்று குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ.அன்பரசனுடன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி திட்டங்களின் பயன்பாடுகளை பயனாளிகளுக்கு வழங்கியபோது.

காஞ்சிபுரம் மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், “கலைஞர் நூற்றாண்டு விழா”வினை முன்னிட்டு, 28.11.2023 அன்று குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ‘பட்டா வழங்கும் விழா’வில் கலந்து கொண்டு, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோருடன் பட்டாக்கள் வழங்கியபோது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான 15.9.2023 அன்று, மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை’ செங்கல்பட்டு மாவட்டம் அலிசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்து மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கியபோது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தபோது.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் 16.7.2023 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.7.2023 அன்று நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் (DISHA) கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தபோது.

திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்தூர் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி தி.மு.க. சார்பில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் நகராட்சியில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாங்காடு நகராட்சியில் 30.04.2023 அன்று நடைபெற்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியபோது.